நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா அண்மையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. திரிஷா தன்னை பற்றிய வதந்திக்கு பதிலளிக்கும் வகையில், இன்ஸ்டாகிராமில் திரிஷா பதிவிட்ட ஒரு வீடியோவில், “என் வாழ்க்கையில் நான் இப்போது யாருடனும் வாக்குவாதம் செய்வதில்லை. யானையால் பறக்க முடியும் என்று நீங்கள் சொன்னால், அது முற்றிலும் சரிதான்.
நான் அதை ஒப்புக்கொள்வதால் அல்ல, மாறாக உங்களை நம்பவைக்க வேண்டும் என்ற அக்கறை எனக்கு இல்லாததால் தான். நான் ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொண்டேன் . நீங்கள் சொல்வது சரி என்பதை நிரூபிப்பதை விட அமைதியே மேலானது. காதல் மட்டுமே எல்லாம் அல்ல, ஆனாலும் காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த சமயத்தில் விஜய்க்கும் திரிஷாவுக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்றெல்லாம் சில ரீல்ஸ்கள் கண்ணில் பட்டது. திருமணத்துக்கு திரிஷாவின் தாயார் உமாவும் சம்மதம் சொல்லி விட்டதாகவும் , தேர்தலுக்குப் பிறகு, இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாகவும் சிலர் யூடியூப்களில் பேசி வந்தனர்.
மேலும், இந்த தேர்தல் முடிந்த பிறகு, நடிகை திரிஷாவும் அரசியலில் நேரடியாக குதிக்கலாம். விஜய் மனைவிக்கு விவகாரத்து கொடுத்து விடவும் வாய்ப்புள்ளது. சங்கீதா 100 கோடி வரை ஜீவானாம்சம் கேட்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், விஜய் 35 கோடி வரைதான் கொடுக்க முடியுமென்று கூறி விட்டதாக தெரிகிறது.
தற்போது, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இனிமேல், நீதிமன்றம்தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்கும். இதற்கிடையே, திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 19ம் தேதி ரோடு ஷோ நடத்திய தவெக தலைவர் விஜய், புனித அந்தோணியார் தேவாலயத்தில் மண்டி போட்டு நகர்ந்து பிரார்த்தனை செய்தார்.
அதைத்தொடர்ந்து, பச்சநாச்சி அம்மன் கோவிலுக்குச் சென்று மனமுருகி வேண்டினார். அதோடு, பள்ளிவாசலுக்கும் சென்றார் விஜய். தேர்தல் நேரத்தில் விஜய் 234 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்வார் என அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர், பெரிதாக எங்கும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.
அவர் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று இரண்டாம் முறையாக பிரச்சாரம் செய்துள்ளார். எனினும் , இன்றைய பிரச்சாரத்தின்போது மக்களிடம் எதுவும் பேசாமல் ரோடு ஷோ மட்டும் செய்துவிட்டு சென்றார். விசில் ஊதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
5 மணி நேரத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு இரண்டு மணி நேரத்தில் ரோடு ஷோவை முடித்துவிட்டு புறப்பட்டு சென்று விட்டார். தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சித் தலைவர்கள் நேரம் காலம் பார்க்காமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். கோவையில் பணப்பட்டுவாடா தடாலடியாக நடக்கிறது. அதிமுகவினர், திமுகவினர் மோதிக் கொண்டு அலைகின்றனர்.
ஆனால் , தீவிர பிரசாரத்தில் ஈடுபடாமல், விஜய் சும்மா வருகிறார். ஏதாவது செய்கிறார். போய் விடுகிறார் என்று அவரது கட்சியினரே அதிர்ந்து போய் கிடக்கின்றனர். தனது முகத்தைக் காட்டினாலே மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்று அதீத நம்பிக்கையில் விஜய் இருப்பதையே இது காட்டுகிறது.
தற்போது, மற்றொரு சுவாரஸ்யமானத் தகவலும் வெளியாகியுள்ளது. வரும் மே 4ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாள். அன்றைய நாளில் இன்னொரு நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது. நடிகை திரிஷாவின் 44-வது பிறந்த நாளும் அன்றுதான் வருகிறது.
இதையடுத்து, மே 4ம் தேதி சென்னையில் தாஜ் ஹோட்டலில் தனது முக்கியமான நண்பர்களுக்காக த்ரிஷா ஒரு சிறப்பு பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பிறந்த நாள் பார்ட்டியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எம்.எல்.ஏவாக கலந்து கொள்வாரா… அல்லது வெற்றி பெற்ற கட்சியின் தலைவராக கலந்து கொள்வாரா அல்லது தோல்வியின் நாயகனாக கலந்து கொள்வரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் எம்.எல்.ஏ ஆனாலோ அல்லது அவரது கட்சி வெற்றி பெற்றாலோ இந்த பார்ட்டி களை கட்டும் என்றும் கூறுகிறார்கள்..


