முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன்!

சென்னை:

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

நாளைப் பிறந்த நாளைக் கொண்டாடும் தமிழ்நாடு முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், எனது அன்பான நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று நேரில் சந்தித்து, நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என வாழ்த்தினேன்.

தமிழக மக்கள், தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாடு பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்ற காலத்தில், தனது முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டை காக்கும் காவலராக ஸ்டாலின் உருவாகியுள்ளார். அவருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *