ஈரான், அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், ஒப்பந்தத்தை ஈரான் ஏற்கத் தவறினால், அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் ஈரான், அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பாக இரண்டாம் சுற்று பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஈரானுடன் ஒரு நல்ல ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, 2015 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஒபாமா ஈரான் மீது காட்டிய அதே மென்மையான அணுகுமுறையைத் தான் பின்பற்றப் போவதில்லை என்று கூறினார்.
அமெரிக்கா முன்வைத்துள்ள ஒப்பந்தத்தை ஈரான் ஏற்கத் தவறினால், அந்நாட்டின் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட முக்கியப் இடங்களை அமெரிக்கா அழிக்கும் என்று மிரட்டல் விடுத்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 இந்திய கப்பல்கள் மீது தாக்கப்பட்டதன் மூலம் ஈரான் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

