விடியா அரசே போதைப்பொருளை ஒழி..!

Advertisements

சாலவாக்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் தமிழக பாஜக இளைஞரணி சார்பாக போதை கலாச்சாரத்தை தடுக்க தவறிய  திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ..

காஞ்சிபுரம் மாவட்டம்  சாலவாக்கம் பேருந்து நிலையம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் தமிழக பாஜக இளைஞரணி சார்பாக தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்வை கெடுக்கும் போதை கலாச்சாரத்தை தடுக்க தவறிய திறனற்ற மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் விக்னேஷ் மற்றும் மாவட்ட விவசாய அணி தலைவர் எஸ்எம்.குப்பன் தலைமையில் பாஜக மாவட்ட தலைவர் ஜெகதீசன்,  வரவேற்பில் அண்ணா திமுக மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் , கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் , பாமக மாவட்ட செயலாளர் பொ.மகேஷ்குமார் , புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் விடியா திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *