Advertisements

திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி சேருவதற்கு கட்சியின் தகுதியையும் மீறி அளவுக்கு அதிகமான கோரிக்கைகள் வைத்த பிரேமலதா விஜயகாந்த் தற்போது கட்சி தொண்டர்களாலேயே அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார் . கடந்த ஒன்பதாம் தேதி கடலூரில் கடல் போல் திரண்டு வந்த தேமுதிகவினர் இப்பொழுது விருப்ப மனு கொடுப்பதற்கு ஒருவர் கூட வரவில்லை என்பது பேரதிர்ச்சி தகவலாக பார்க்கப்படுகிறது .
கேப்டன் விஜயகாந்த்தால் தொடங்கப்பட்ட தேமுதிக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த போது உச்சகட்டமாக ஆறு சதவீத வாக்கு வங்கியை பெற்றது. ஆனால் இதன் பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது பூஜ்ஜியம் புள்ளி 45 சதவீத வாக்குகள் மட்டுமே தேமுதிகவிற்கு இருக்கிறது .
இந்த நிலையில் , தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கிறதோ அவர்கள் தான் முதலமைச்சர் பதவியை எட்டிப் பிடிப்பார்கள் என்கிற ரீதியில் பிரேமலதா விஜயகாந்த் ஏராளமான கோரிக்கைகளை வைத்து வருவது பட்டி தொட்டி எங்கும் பேசும் பொருளாகி இருக்கிறது. இதுவரை எந்த அரசியல் கட்சியும் இதுபோன்று அளவுக்கு மீறி கோரிக்கைகள் வைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் . அவர்களிடம் அதிமுகவில் கூட்டணி சேர வேண்டும் என்றால் அன்புமணி ராமதாசை விட அதிகப்படியான தொகுதிகள் தர வேண்டும் அதாவது 30 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதே போல் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேசியபோதும் 30 தொகுதிகளை தே.மு.தி.க கேட்டது . இதற்கு அடுத்தபடியாக திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைச்சர் ஏவா வேலு ஐசரி கணேஷ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர் . அப்போது திமுகவில் கூட்டணி சேர வேண்டுமானால் 15 தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா பதவி தரவேண்டும் என பேசப்பட்டது .
இவர்கள் அனைவரிடமும் தேர்தல் செலவை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் விஜய பிரபாகரன் போட்டியிடுவதற்கு வசதியாக விருதுநகர் தொகுதியை ஒதுக்கி தர வேண்டும் என்றெல்லாம் பிரேமலதா கோரிக்கை வைத்து வந்தார் . தமிழ்நாடு முழுவதும் தனக்கு இருக்கும் செல்வாக்கை வெளிப்படுத்துவதற்காக பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தி வந்தார் .
இதற்கிடையே பிரேமலதா விஜயகாந்தின் கோரிக்கைகளை எந்த கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை . திமுகவை பொருத்தவரையில் எட்டு தொகுதிகள் தருவதாகவும் அதிமுகவை பொருத்தவரையில் 9 தொகுதிகள் தருவதாகவும் பேசப்பட்டது. இரு கட்சிகளுமே ராஜ்யசபா பதவியும் தருவதாக தெரிவித்தார்கள்.
இவை எல்லாவற்றுக்குமே பிரேமலதா விஜயகாந்த் உடன்படவில்லை. இந்த நிலையில் தேமுதிக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு விருப்பமனுக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது . பொது தொகுதியில் போட்டியிட வேண்டுமானால் 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றும் தனித்தொகுதியில் போட்டியிட வேண்டுமானால் 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றும் புதுச்சேரியில் போட்டியிட வேண்டுமானால் பத்தாயிரம் ரூபாய் கட்டணம் என்றும் நிர்ணயிக்கப்பட்டது .
வருகிற 12-ஆம் தேதி வரை விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டு நான்கு நாட்களாகியும் பத்து நிர்வாகிகள் தவிர வேறு யாரும் விருப்பமனு வாங்க வரவில்லை . கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தருவதற்காக 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பந்தல் மற்றும் இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அவர்கள் நாற்காலியில் அமர்ந்தபடி காற்று வாங்கி கொண்டு இருக்கிறார்கள் . இது குறித்து சில தேமுதிக நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது யாருடன் கூட்டணி என்றே அறிவிக்கவில்லை. அப்படி கூட்டணி அறிவித்தால் தான் வெற்றி தோல்வியை முடிவு செய்து விருப்பமனுவை பெறுவார்கள் என தெரிவித்தனர் . இதற்கிடையே தேமுதிக தரப்பில் விருப்பமனு வாங்க ஆளில்லை என்ற தகவல் மீடியாக்கள் மூலம் வெகு வேகமாக பரவி இருக்கிறது .
இதனால் பிரேமலதா விஜயகாந்த் மிகப் பெரிய அவமானத்துக்கு ஆளாகி இருக்கிறார் . இதனைத் தொடர்ந்து எல் கே சுதீஷ் மற்றும் பல நிர்வாகிகளிடம் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார் . தற்பொழுது உடனடியாக யாருடன் கூட்டணி என்பது பற்றி அறிவிக்கும் நிலைமைக்கு பிரேமலதா விஜயகாந்த் தள்ளப்பட்டு இருக்கிறார் .
எனவே அவர் அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி என இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது . இருந்தபோதிலும் தற்போது , அதிமுக திமுக பாஜக ஆகிய மூன்று கட்சிகளிலும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சுவார்த்தை காண கதவுகளை மூடிவிட்டன .
இப்பொழுது, பிரேமலதா விஜயகாந்த் வலியச் சென்று கதவைத் தட்டி பேரம் பேசும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்பது அரசியல் வரலாற்றில் அதிர்ச்சி செய்தியாக செய்தியாக பார்க்கப்படுகிறது .
Advertisements


