தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடப்பதற்கான கள நிலவரம் இல்லை – திருமாவளவன்

Advertisements

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சொல்வது போல் 1967, 1977 ஆண்டுகளில் நடந்தது போன்ற மாற்றம் 2026இல் நடப்பதற்கான கள நிலவரம் தமிழகத்தில் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் திருமாவளவனிடம், 2026 சட்டமன்றத் தேர்தல் 1967, 1977 ஆண்டுகளில் நிகழ்ந்ததைப் போன்ற மாற்றத்தை உருவாக்கும் என்று விஜய் கூறியது பற்றிச் செய்தியாளர்கள் வினவினர்.

அதற்குப் பதிலளித்த அவர், தமிழ்நாட்டின் கள நிலவரம் இப்போது அப்படி இல்லை என்றார். எம்ஜிஆர் காலத்தில் இருந்ததைப் போன்ற சூழல் தமிழ்நாட்டில் இப்போது கிடையாது என்றார். திரைப்படத்தை நம்பித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என்று விமர்சித்த காலம் மாறிப் போய்விட்டதாகத் திருமாவளவன் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *