தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்….!

Advertisements

தேசப்பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 1992-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 73-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1993 ஏப்ரல் 24 முதல் நடைமுறைக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

2010-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படும் இத்தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், பொதுச்சேவையிலும் தேசிய சேவையிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் நாட்டின் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்குத் தனது பாராட்டுகளையும் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *