பெட்ரோல், டீசல் விலை உயர்வா……?

Advertisements

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தும் திட்டம் தற்போது இல்லை என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. இதையடுத்து, சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என செய்திகள் வெளியாகிருந்தன.

இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இது போன்ற திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

மக்கள் இடையே பீதியை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்றும் கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத ஒரே நாடு இந்தியா மட்டும் தான் என்று குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் கடுமையான விலை உயர்வுகளிலிருந்து இந்தியக் குடிமக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்திய அரசும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் அயராது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *