DMK – M. K. Stalin: 213 பேருக்கு மானியத்துடன் ரூ.129 கோடி மதிப்பிலான கடனுதவி!

கழிவு நீர் அகற்றும் ஊர்திக்காக மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்குக் கடலுதவிக்கான ஆணையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 213 பேருக்கு ரூ.61 கோடி மானியத்துடன் ரூ.129 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்படுகிறது.

சென்னை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவி; தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களைத் தொழிலதிபர்களாக மாற்றுவது குறித்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான கடன் உதவிகளை முதலமைச்சர் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கி வருகிறார். ஆதிதிராவிட மக்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் அவர்களின் மொத்த திட்டத் தொகையில் 35 சதவீத தொகையானது மானியமாக வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களைத் தொழிலதிபர்களாக மாற்றுவது குறித்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன் படி இன்றைய தினம் தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழிவு நீர் அகற்றும் ஊர்திக்காக மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்குக் கடலுதவிக்கான ஆணையை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 213 பேருக்கு ரூ.61 கோடி மானியத்துடன் ரூ.129 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *