N. Rangaswamy: தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை!

பிரெஞ்சு ஆட்சியில் இருந்து புதுச்சேரி விடுதலைபெற்ற தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி: பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு 1954ம் ஆண்டு நவ. 1ம் தேதி விடுதலை கிடைக்கப்பெற்றது. 180 ஆண்டுகளுக்கு பின் வாக்கெடுப்பு மூலம் புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது.இதனை கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரி விடுதலைபெற்ற தினமாக கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில்  பிரெஞ்சு ஆட்சியில் இருந்து புதுச்சேரி விடுதலைபெற்ற தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கடற்கரையில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ரங்கசாமி ஏற்றுக்கொண்டார்.

காவல்துறையினர், படைப்பிரிவினர், பள்ளி மாணவ – மாணவிகள் அணிவகுப்பு நடத்தினர்.பின்னர் விழாவில் பேசிய  முதல்வர் ரங்கசாமி பரப்பளவில் சிறிய மாநிலம் என்றாலும் பெரிய மாநிலங்களுக்கு இணையாக புதுச்சேரி வளர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரி தனிநபர் வருமானம் ரூ.2,22,451ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி துறைமுகம் – சென்னை துறைமுகம் இடையே சரக்குகளை கையாளும் பணி தொடங்கியுள்ளது என்று விடுதலை நாளையொட்டி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *