
En Mann En Makkal
ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு திமுகவினர் ஏன் ஓட்டளிக்கவில்லையெனத் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்…
ஸ்ரீவில்லிபுத்துார்:
என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொள்ளும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடையநல்லுார், புளியங்குடி முடித்து இன்று(செப்.,06) ஸ்ரீவில்லிபுத்துாரில் மேற்கொண்டார்.
யாத்திரையில் வரவேற்க குவிந்த மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:பட்டியலினத்தவர், பெண்கள் உள்ளிட்டோர் சில கோயில்களில் பூசாரியாக இருப்பதை சனாதனம் ஏற்கிறது.சனாதன தர்மத்தை ஒழிப்போம் என வாக்குறுதி அளித்துத் தேர்தலைச் சந்திக்க திமுக தயாரா?
ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு திமுகவினர் ஏன் ஓட்டளிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் திமுகவினர் ஓட்டளித்தது யஸ்வந்த் சின்ஹாவுக்கு தான். பழங்குடியின பெண்ணை ஜனாதிபதி இருக்கையில் அமரவைத்ததே சனாதன தர்மம். இவ்வாறு அவர் பேசினார்.

