பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலி!

Advertisements

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 10 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 6 பேர் உயிரிழந்தனர். அதில் 5 பேர் பெண்கள் ஆவர்.ஒருவர் ஆண் ஆவார். உயிரிழந்த 10 பேர் தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமாகின. செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருப்பதால், அறைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மீட்பு பணியில் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *