S. Jaishankar: ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு!

Advertisements

ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் சந்தித்து பேசினார்…

ஜகார்தா: இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் 20வது ஏசியான் உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாடுகளில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா செல்கிறார். இந்த மாநாட்டில் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்களைப் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தோனேசியா சென்றுள்ளார். அவர் இன்று இந்தோனேசிய தலைநகர் ஜகாதாவில் ரஷிய வெளியுறவுத்துறை செர்ஜி லவ்ரோவை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள்குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கமாட்டாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜி20 மாநாட்டில் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோ பங்கேற்க உள்ளார். ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி – இந்திய வெளியுறவுத்துறை மந்திரி மட்டத்திலான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத்தப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *