Ajith Kumar: நன்றி தெரிவித்த விஷ்ணு விஷால்!

Advertisements

தனக்கு நடிகர் அஜித் போக்குவரத்து வசதி செய்து உதவியதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார்.

சென்னை: காரப்பாக்கத்தில் உள்ள தன் வீட்டை மழை நீர் சூழ்ந்ததாகவும், தான் செல்ஃபோன் சிக்னல், மின்சாரம், வைஃபை இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் நேற்று  காலை பதிவிட்டிருந்தார்.  மேலும் இதே வில்லாவில் பிரபல நடிகர் ஆமீர்கானும் தங்கியிருந்த நிலையில், மீட்புப் படையினர் விரைந்து சென்று இவர்களை படகு மூலம் மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து தனக்கு விரைந்து உதவி செய்த தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு படையினருக்கு நன்றி  என விஷ்ணு விஷால் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தங்களை நடிகர் அஜித் நேரில் வந்து சந்தித்ததாகவும், போக்குவரத்து வசதி செய்து கொடுத்து உதவியதாகவும், அவருக்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் பகிர்ந்துள்ளார்.

“எங்கள் நிலை பற்றி பொதுவான நண்பர் மூலம் அறிந்த, எப்போதும் உதவக்கூடியவரான நடிகர் அஜித் சார்,  எங்கள் வில்லா நண்பர்களுக்கும் எனக்கும் போக்குவரத்து உதவிகளை ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித் சார்” எனப் பதிவிட்டுள்ளார்.இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *