இந்தியா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாயடுகிறது. இதில், ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியாவும், ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த, போட்டியில், கேப்டன் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய வீரர்களும், கேப்டன் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா வீரர்களும் பங்கேற்கின்றனர். மேலும், தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

