நெல் கொள்முதல் செய்யாமல் காலங்கடத்துவதற்கு – நயினார் நாகேந்திரன் கண்டனம்

Advertisements

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு காலந்தாழ்த்தி வருவதற்கு மாநில பாஜக தலைவர் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதுமுள்ள கொள்முதல் நிலையங்களில் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பருவ மழையையும் தீபாவளியையும் முன்கூட்டியே கணக்கிட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, உரிய விலையைப் பெற்றுக் கொடுப்பது ஓர் அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்முதல் செய்யாமல், அறுவடை செய்த நெல்மணிகளை மழையில் நனைய விட்டிருப்பது திமுக அரசின் அலட்சியப் போக்கையே காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

நானும் “டெல்டாக்காரன்” என்று பெருமிதம் கொள்வது எள்ளளவாவது உண்மையென்றால் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்முதல் செய்து விவசாயிகள் நலனைக் காத்திட வேண்டும் என்று நாகேந்திரன் தெரிவித்துள்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *