திமுக பல குடும்பங்களின் தலையெழுத்தை மாற்றியுள்ளதாக ஸ்டாலின் பேச்சு.!

திமுக அரசு ஐந்தாண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை மாற்றியுள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய கிறித்தவ உயர்கல்வி நிறுவனங்களின் சங்கங்கள் சார்பில் சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் முதல்வன் திட்டத்தில் நகர்ப்புறங்களைவிட ஊர்ப்புறங்களைச் சேர்ந்த மாணவியர்தான் அதிகப் பயன்பெற்றதாகத் தெரிவித்தார். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பெண்களின் உயர்கல்விச் சேர்க்கை 34 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், இத்திட்டத்தில் 8 இலட்சம் மாணவியர் பயனடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஐந்தாண்டுகளில் திமுக ஆட்சி பல குடும்பங்களின் தலையெழுத்தை மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *