மத்திய அரசை எதிர்த்து போராடிய விவசாயிகள்.. காரணம் என்ன..?

அமெரிக்காவிலிருந்து வரி விலக்குடன் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் மத்திய அரசின் முடிவிற்கு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து அமெரிக்காவிலிருந்து வரி விலக்குடன் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளரைச் சந்தித்துக் பேசிய விவசாய சங்கத்தினர், அமெரிக்காவிலிருந்து தடையற்ற வரி விலக்குடன் மரபணு மாற்றப்பட்ட சோளம், சோயா மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால், இந்திய விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்குச் சந்தையில் விலை கிடைக்காது என்றும் இது ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் என்றும் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை மிகுந்த கவனத்துடன் கேட்டறிந்த முதலமைச்சர் ரங்கசாமி, இது தொடர்பாக உடனடியாகப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாகப் பேசி, இந்திய விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவேன்” என்று உறுதியளித்தார் விவசாய சங்கப் பிரநிதிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *