Tiruvarur : பள்ளியில் நச்சுப்பாம்பு கடித்ததில் மாணவன் உயிரிழப்பு.!

Advertisements

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளியில் நச்சுப்பாம்பு கடித்ததில் மாணவன் உயிரிழந்ததாகவும், நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ கூட இல்லாத அரசுப்பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிரிழப்பது கொடுமையின் உச்சம் எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ? சுவர் தன் மீது விழுந்துவிடுமோ? தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ? என்ற அச்சங்களுக்கு நடுவே தான் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரழந்த பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *