வயதான மா.செயலாளர்களுக்கு ஆபத்து..? அதிர்ச்சியில் எவ வேலு , அனிதா ராதாகிருஷ்ணன்.!

Advertisements

திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவும், கட்சிப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க 9 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

கட்சியின் கட்டமைப்பை இளமையாகவும், ஆற்றல் மிக்கதாகவும் மாற்றும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தற்போதைய மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு வயது வரம்பும், பதவி கால வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

மாவட்டச் செயலாளர்கள்: திமுகவில் இனி 110 மாவட்டச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்படும். இப்பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளராகப் பதவி வகிக்க முடியும்.

இதர நிர்வாகிகளுக்கான வயது வரம்பு:

ஒன்றியச் செயலாளர்கள்: 60 வயது

நகரச் செயலாளர்கள்: 60 வயது

பேரூர் செயலாளர்கள்: 50 வயது

மாநகராட்சி வட்டச் செயலாளர்கள்: 50 வயது

கிளைச் செயலாளர்கள்: 45 வயது

நிர்வாகப் பொறுப்பு நீக்கம்: கட்சியில் அமைப்பு ரீதியான சீரமைப்பின் படி, ‘மாநகரச் செயலாளர்’ எனும் பதவியில் இருந்த நடைமுறை இனி செயல்பாட்டில் இருக்காது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்புகளின் மூலம் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்குக் கட்சியில் அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *