
மதுரை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து இரண்டையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராப்பு ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, நாடளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராப்பு ராம்மோகன் நாயுடு பதிலளித்தார்.
அப்போது, மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலையத்துக்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிர பரிசீலனையில் உள்ளது என்றார்.
மதுரை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து இரண்டையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


