அரசுப் பள்ளியில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம்: சீமான் கடும் கண்டனம்.!

Advertisements

சேலம் அரசு பள்ளியில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த வட மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சேலம் அருகே குப்பூரில் உள்ள அரசு மேல்நிலை மாதிரிப் பள்ளியில், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த வட மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை ஆசிரியர்களாக நியமனம் செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று வினவியுள்ளார். தற்போது அமைச்சர்களுக்கும் எந்த வேலை இல்லை என்ற அளவிற்கு, அனைத்து துறைகளின் பணிகளுமே தனியார் நிறுவனம் மூலம் வடமாநிலத்தவரிடம் ஒப்படைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் பணிநியமனங்கள் அனைத்தும் வடமாநிலத்தவரைக் கொண்டு நிரப்பப்படுவதை, தமிழிளம் தலைமுறைப்பிள்ளைகள் இனியும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கொடுமைகள் தொடர்ந்தால் விரைவில் நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *