திமுகவிடம் காங்கிரஸ் கேட்கும் 40 தொகுதிகள் பட்டியல்.!

Advertisements

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என திமுக மேலிடத்தில் காங்கிரஸ் தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் குறி வைத்திருக்கும் 40 தொகுதிகள் குறித்த பட்டியல் தற்போது வெளியே கசிந்துள்ளது .

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சி மொத்தம் 25 தொகுதிகளில் போட்டியிட்டது இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் . மேலும் அமைச்சரவையில் பதவி தர வேண்டும் என்றெல்லாம் காங்கிரஸ் சார்பில் குரல் கொடுத்து வந்தனர். இல்லாவிட்டால் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதாகவும் திரை மறைவில் மிரட்டி வந்தனர்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இதில் தலையிட்டு திமுகவுடன் சமரசமாக செல்லுங்கள் அமைச்சரவையில் இடம் கேட்க வேண்டாம் என தெரிவித்தார். இது தவிர திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இதன் மூலம் காங்கிரஸ்க்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் கூட்டணி இல்லை என்பது தெளிவாகியது.

ஐந்து நிர்வாகிகளை கொண்ட காங்கிரஸ் குழுவினர் திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து தொகுதி விவகாரங்கள் குறித்து பேசினர். அப்பொழுது வருகிற சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கி தரவேண்டும்.  காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் முக்கியத்துவம் தந்தால் தான் பாரதிய ஜனதா கட்சியை விரட்டி அடிக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மு க ஸ்டாலின் பதில் தெரிவிக்கும் பொழுது திமுக தரப்பில் தேர்தல் பணி குழுவினர் உங்களுடன் தொடர்பு கொள்வார்கள் அவர்களுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுங்கள் என தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் , தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட முடிவு செய்துள்ள 40 தொகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியே தெரிய வந்துள்ளது.

இதில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 18 தொகுதிகளையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி முனைப்பாக இருக்கிறது. அந்த வகையில் பொன்னேரி,  ஸ்ரீபெரும்புதூர்,  சோளிங்கர்,  ஈரோடு கிழக்கு,  உதகமண்டலம்,  விருத்தாச்சலம் , அறந்தாங்கி , காரைக்குடி , சிவகாசி,  திருவாடானை,  சிறுவைகுண்டம் , நாங்குநேரி,  கிள்ளியூர்,  தென்காசி , குளச்சல்  , வேளச்சேரி,  மயிலாடுதுறை ,விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் கடந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது .

எனவே இந்த முறையும் மேற்படி 18 தொகுதிகளை ஒதுக்கி தர காங்கிரஸ் தீர்மானமாக இருக்கிறது. இது தவிர செய்யூர் , மதுராந்தகம்,  கே வி குப்பம்,  ஊத்தங்கரை,  கள்ளக்குறிச்சி,  ஆத்தூர்,  ஓமலூர்,  சேலம் , தெற்கு சங்ககிரி  , நாமக்கல் , கோபி சூலூர்,  கோவை , தெற்கு உடுமலைப்பேட்டை , விருத்தாச்சலம் , கடலூர் , சிதம்பரம் , மயிலாடுதுறை , பாபநாசம் , மேலூர் , மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி தர வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறார்கள்,

தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக தரப்பில் ஜனவரி மாதம் தான் முடிவு செய்யப்படும் என தெரிகிறது . எனவே காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கி தரப்படுமா , அவர்கள் குறிப்பிட்ட தொகுதிகள் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *