எம்.ஜி.ஆருக்குப் பிறகு முதல்வர் விஜய்: திரைக்கு வந்த இறுதிப் படம் ‘ஜனநாயகன்’..!

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜயின் கடைசி திரைப்படம் ஆன ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

முன்னாள் முதலமைசசர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிகழ்ந்துள்ளது.

1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவர் நடிப்பில் உருவான ‘மீனவ நண்பன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகிய திரைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *