
நாம் தமிழர் கட்சியில் காளியம்மாளை போலவே சாட்டை துரைமுருகனும் தலைசிறந்த பேச்சாளராக விளங்கி வருகிறார். இணையதளங்களில் இவரது பேச்சைக் கேட்பதற்காக லட்சக்கணக்கான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். நாம் தமிழர் சீமானுக்கு அடுத்தபடியாக அந்தக் கட்சியில் சாட்டை துரைமுருகன் இரண்டாம் கட்ட தலைவர் போல் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நாம் தமிழர் சீமானுக்கும் சாட்டை துரைமுருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. நாம் தமிழர் கட்சியில் நட்சத்திரத்தன்மை கொண்ட பேச்சாளர் சாட்டை துரைமுருகன்.
இவர் முன்னாள் ராணுவ வீரராக இருந்தவர். சமூக ஆர்வலராகவும் அறியப்படுகிறார். பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் பட்டம் பெற்றவர். இதன் பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றியவர் . கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.
அப்போது முதல் கட்சியில் மாநில இளைஞரணி செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார் தற்பொழுது நாம் தமிழர் கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு இணையதள சேனல் ஒன்றை தொடங்கி பேச தொடங்கினார் . இந்த youtube சேனலுக்கு கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். நையாண்டி கலந்த இவரது அரசியல் பேச்சு பல சமயங்களில் ஆவேசமாகவும் அமைந்துவிடும் . அந்த வகையில் பலமுறை கைது செய்யப்பட்டு இருக்கிறார் . பின்னர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சிக்காக அயராது உழைத்து வருகிறார். தற்பொழுது நாம் தமிழர் கட்சியில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8.2 சதவீத வாக்குகள் பெற்று மாநில அந்தஸ்தை பெற்றிருக்கிறது நாம் தமிழர் கட்சி. இந்த நிலையில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை ஐந்து மாதங்களுக்கு முன்பு இருந்தே சீமான் அறிவித்து வருகிறார்.
அதன்படி நாம் தமிழர் கட்சியில் பிரபலமான , இடும்பாவனம் கார்த்திக், பாத்திமா பர்கானா, வெண்ணிலா தாயுமானவன், சினிமா இயக்குனர் களஞ்சியம், ஹுமாயுன் மரியா ஜெனிஃபர், கோவை கார்த்திகா, ஹிம்லர் அனீஸ் பாத்திமா அபூபக்கர், சீதாலட்சுமி , டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வேட்பாளராக ஏற்கனவே சீமான் அறிவித்திருக்கிறார், இது தவிர கட்சிக்கு அப்பாற்பட்டு பிரபலமாக விளங்கும் சிலரையும் அழைத்து வேட்பாளராக அறிவிக்க சீமான் முயற்சிகள் செய்து வருகிறார்.
இந்த நிலையில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் சாட்டை துரைமுருகன் பெயர் இடம் பெறவில்லை . கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் சாட்டை முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். பின்னர் தோல்வியடைந்தார். இந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு தராதது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சாட்டை துறை முருகனுக்கும், நாம் தமிழர் சீமானுக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன , சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் சமூகவலை தளத்திற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என ஏற்கனவே சீமான் அறிவித்திருந்தார் , இந்த நிலையில் வேட்பாளர் பட்டியலிலும் அவரது பெயர் விடுபட்டிருப்பது கட்சிக்குள் முனுமுனுப்பை ஏற்படுத்தி இருக்கிறது,
இதுகுறித்து நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவிக்கும் பொழுது , சாட்டை துரைமுருகன் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறேன் , சீமான் அண்ணன் போட்டியிடும் தொகுதியில் களப்பணி மேற்கொள்கிறேன் என்றுதான் சொன்னாரே தவிர அவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் எதுவும் தெரிவிக்கவில்லை, அந்த அடிப்படையில் அவருக்கு சீட்டு இல்லை என சொல்லப்படுகிறது என்கிறார்கள்,
இதற்கிடையே சில பெண் நிர்வாகிகள் நாம் தமிழர் சீமானிடம் எங்களால் தேர்தல் செலவினங்கள் செய்ய முடியாது களப்பணிகளையும் எங்களால் சமாளிக்க முடியாது தயவு செய்து வேட்பாளர்களை மாற்றி விடுங்கள் நாங்கள் பிரச்சாரம் வேண்டுமானால் செய்கிறோம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து நான் ஆலோசனை செய்து வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம் செய்கிறேன் என சீமான் உறுதி அளித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே நாம் தமிழர் சீமானுக்கும் சாட்டை துரைமுருகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. சாட்டை முருகனின் வலைத்தளத்தில் தொடர்ந்து சீமானுக்கு விருப்பம் இல்லாத பல தகவல்களை அவர் பேசி வருகிறார். இது குறித்து அவரது வலைதளத்திற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என சீமான் தெரிவித்துவிட்டார். இருந்தபோதிலும் தொடர்ந்து சாட்டையின் சில பேச்சுகள் சீமானுக்கு பெரும் வேதனை அளித்து வருகிறது இதனால் சாட்டை துறைமுருகன் மீது சீமான் கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே தனக்கு சீட் தராததால் மிகுந்த மன வேதனையில் இருக்கும் சாட்டை துரைமுருகன் எந்த நேரமும் கட்சியை விட்டு விலகலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே நாம் தமிழர் கட்சியில் அவருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரான சாட்டை துரைமுருகனை வேட்பாளர் பட்டியலில் சேர்க்காதது வேதனை அளிக்கிறது இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கிறது எனவே சாட்டை துரைமுருகன் குறித்து ஆலோசனை செய்து அவருக்கு சீட்டு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து மிகப் பலமான பேச்சாளராக திகழ்ந்த காளியம்மாள் நீக்கப்பட்ட நிலையில் , தற்போது சாட்டை துரைமுருகனும் கருத்து வேறுபாடுகளால் ஒதுங்கி இருக்க தொடங்கி இருக்கிறார் என்பது பரபரப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது,


