கோவையில் ரேபிஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நோய் பாதித்த 25 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தினமும் வாகனங்களில் செல்வோரையும், தனியாகச் செல்லும் குழந்தைகளையும் அச்சுறுத்துகின்றது.மேலும், தெருநாய் தொல்லைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிஷன் ரேபிஸ் என்ற அமைப்பினர் ஹியுமன் அனிமல் சொசைட்டி என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும்,ரேபிஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், மாநகர் மற்றும் புறநகரின் சில பகுதிகளில் 45 நாய்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 25 நாய்களுக்கு ரேபிஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள கலெக்டர் பவன்குமார், உள்ளாட்சி அமைப்புகளில் ரேபிஸ் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தில் தெருநாய்கள் பிறப்பு விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,பொது

