Chennai Corporation:பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம்! டிஜிட்டல் முறையில் அபராதம் வசூலிக்க முடிவு !

Advertisements

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் 7 ஆயிரம் டன் வரையிலான குப்பைகள் அகற்றப்படுகிறது. இதில், பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் விதிகளை மீறிக் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் அபராதத் தொகை ரூ.500 முதல் ரூ.5 ஆயிரமாக மாநகராட்சி உயர்த்தியது.

கடந்த 10 நாட்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறிக் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.2½ லட்சம்வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அபராதத் தொகை விதிக்கும் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க பயன்படுத்தும் கருவிபோல் டிஜிட்டல் கருவியை மாநகராட்சி சோதனை முறையில் பயன்படுத்தி வருகிறது. அதில் முதற்கட்டமாக 500 கருவிகளை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.

இந்தக் கருவிகள் 15 மண்டலங்களில் வழங்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது. டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *