பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற 25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பழனி கோவில் நிலம் முறைகேடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக் கூறியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள நிலையில் தற்போது தவெக ஆட்சியில் இரண்டு தனியாருக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். விசாரணை செல்லும் கோணத்தைப் பார்த்தால், மோசடி செய்தவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான் அரசின் செயல்பாடுகள் உள்ளனவோ என்ற கேள்வி எழுவதாக அவர் கூறியுள்ளார்.
பழனி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த த.வெ.க. அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற 25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

