Advertisements

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அந்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதிக்குமாறு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கியது. இதன் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளதால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisements



