அண்ணாமலை டெல்லி சென்றது ஏன்? எடப்பாடி இறுதி முடிவு..!

Advertisements

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கின்றன . எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தொண்டர்களும் தலைவர்களும் மிகப் பரபரப்பாக காணப்படுகிறார்கள். கட்சி விட்டு கட்சி தாவுவது , புதிய கூட்டணி அமைப்பது தேர்தல் அறிக்கைகளை தயாரிப்பது,  வேட்பாளர்களை தேர்வு செய்வது என அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் , தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லி பாஜக மேலிடத்தால் அழைக்கப்பட்டு அவசர அவசரமாக அவர் டெல்லி சென்று இருக்கிறார். இன்று மாலை அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருக்கிறார். அண்ணாமலை திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்டது ஏன் டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்பது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

ஓ பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைக்கப்படுகிறார் என்ற செய்தியை தமிழக மக்களுக்கு முதன்முதலாக நமது ஜெம் தொலைக்காட்சி தான் அறிவித்தது.அதேபோல் பாரதிய ஜனதா கட்சியுடன் டிடிவி தினகரன் மீண்டும் இணையப் போகிறார் என்ற தகவலையும் நமது ஜெம் தொலைக்காட்சி தான் முதன்முதலாக வெளியிட்டது.

தற்பொழுது,  அந்த வகையில் இறுதி கட்ட காட்சிகள் அரங்கேறி வருகின்றன. தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு தற்பொழுது டெல்லி மேலிடம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது . அந்த வகையில் நயினார் நாகேந்திரன் ஓரம் கட்டப்பட்டு வருகிறார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் பணியை செய்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற இறுதி முடிவுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருக்கிறார்.

இதன் முதல் கட்டமாகத் தான் ஓபிஎஸ் பன்னீர்செல்வத்தை அவர் டெல்லிக்கு அழைத்துப் பேசினார் அடுத்த கட்டமாக டிடிவி தினகரனுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அண்ணாமலைக்கு உத்தரவிட்டார். அதன்படி கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் ஒரு பங்களாவில் டிடி வி. தினகரன் அண்ணாமலை ஆகியோர் இடையிலான ரகசிய சந்திப்பு நடைபெற்றது . இந்த சந்திப்பின்போது இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டார்கள்.

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அண்ணாமலை பேசியபோது ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது . அவரும் கிட்டத்தட்ட சம்மதம் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் உங்களுடைய கருத்து என்ன என டி டி வி தினகரனிடம் கேட்டிருக்கிறார்.

அதிமுகவை ஒருங்கிணைப்பது தான் எனது நோக்கம் ஆனால் அதே சமயத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் என்னை ஒருங்கிணைப்பதற்கு அவர் சம்மதிக்க மாட்டார் வேண்டுமானால்,  நான் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் பேசியதாக தெரிகிறது,

உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலை இடமும் இதே கருத்தை தான் தெரிவித்திருக்கிறார். ஆகவே இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்த நிலையில் அங்கு இரவு விருந்து நடந்தது. இந்த நிலையில் தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் இருந்து அண்ணாமலைக்கு திடீரென போன் வந்தது உடனடியாக டெல்லிக்கு புறப்பட்டு வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் இரவோடு இரவாக டெல்லிக்கு பறந்து சென்று விட்டார் இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருக்கிறார்.

இதற்கிடையே அண்ணாமலை தீவிரமாக பணி செய்யும் பொறுட்டு அவருக்கு முக்கிய பொறுப்பு தருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில்,  டெல்லி மேலிடத்தில் உயர் பதவி வழங்குவதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது. ஆனால் தனக்கு தமிழக அரசியலில் வாய்ப்பு கொடுத்தால் போதும் டெல்லி பாஜக மேலிட அரசியலில் நான் பணி செய்ய விரும்பவில்லை என அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

எனவே இது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார். அப்பொழுது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்துக் கொள்ளலாமா என கேட்டிருக்கிறார் . அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்துக் கொள்ளலாம் என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ரகசிய பேச்சும் இப்பொழுது வெளியே கசிந்திருக்கிறது. இந்த நிலையில் வெகு விரைவிலேயே ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைக்கப்படலாம் என தெரிகிறது . அதே சமயத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் டிடிவி தினகரன் இணைக்கப்படுவார் என்றும் உறுதியாகி இருக்கிறது என்பது முக்கிய செய்தி ஆகும்.

இதற்கிடையே அடுத்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார்.  அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் பிரேமலதா விஜயகாந்த் ஜான்பாண்டியன் பாரிவேந்தர் ஏசி சண்முகம் என அனைவரையும் சந்தித்து பேச இருக்கிறார் . இதன் அடுத்த கட்டமாக ஒரே மேடையில் இவர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நிற்கலாம் என தெரிகிறது.

எனவே அதிமுகவில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் எட்டப்பட்டு விட்டன. இதற்கிடையே அதிமுகவில் ஒருங்கிணைப்பு சம்பந்தமாக சசிகலா எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதேபோல் சசிகலாவை இணைத்துக் கொள்வது தொடர்பாக எந்த கருத்தும் முன்வைக்கப்படவில்லை.

ஓபிஎஸ் டிடிவி தினகரன் ஆகியோர்அதிமுக பாஜக கூட்டணியில் இணையும் பட்சத்தில் எந்த காரணம் கொண்டும் சசிகலாவை இணைத்துக் கொள்ள முடியாது.  அவரை இணைத்து கொண்டால் கட்சியையும் ஆட்சியையும் அபகரித்து விடுவார் என எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *