திமுக அதிமுக கூட்டணி பட்டியல்; முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு..!

Advertisements
வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் ஒரு வழியாக கூட்டணி முடிவுகளை எட்டி விட்டன குறிப்பாக திமுக அதிமுக கூட்டணிகள் இறுதி முடிவு செய்யப்பட்டு தொகுதிகளும் பங்கீடு செய்யப்பட்டு விட்டன. திமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள்.  அதிமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள்.  எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விவரங்கள் வெளியே கசிந்து உள்ளன .
அதிமுகவை பொறுத்த வரையில் கூட்டணி விவகாரம் மிகப்பெரிய புயலை கிளப்பி வந்தது.  பாரதிய ஜனதா கட்சியை தவிர யாரும் கூட்டணி சேராத நிலையில் நிச்சயமாக வெற்றி கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிச்சாமி பேசி வந்தார் . இந்த நிலையில்,  பிரதமர் மோடி சென்னை வருகையை ஒட்டி அதிமுகவில் கிட்டத்தட்ட கூட்டணி கட்சிகள் குறித்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது.
அந்த வகையில் அதிமுகவில் பாரதிய ஜனதா கட்சி அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி , டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் , ஜி கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் , பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி,  டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய நீதி கட்சி மற்றும் பூவை ஜெகன் தலைமையிலான புதிய பாரதம் கட்சி,  ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் , உழவர் உழைப்பாளர் கட்சி ஜனதா தளம் செக்யூலர் ஆகிய பத்து கட்சிகள் இணைந்துள்ளன.
இது தவிர தேமுதிகவைகூட்டணியில் சேர்க்க  தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன . இன்னும் ஒரு சில நாட்களில் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்து முடிவு தெரிவிப்பார் என தெரிகிறது . இதனிடையே அதிமுக சார்பில் கூட்டணி தொகுதி பங்கீடுகளும் முடிவு செய்யப்பட்டு விட்டன. அதிமுகவை பொருத்தவரையில் 170 முதல் 180 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது . இதில் உள் ஒதுக்கீடாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன .
இந்திய ஜனநாயக கட்சி மற்றும் புதிய நீதி கட்சிக்கு தலா 2 தொகுதிகளும் , தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகளும்,  ஜான்பாண்டியனின் தமிழகம் முன்னேற்றக் கழகத்திற்கு இரண்டு தொகுதிகளும் அன்புமணி தலைமையிலான பாமகவிற்கு 18 தொகுதிகளும் , ஒரு ராஜ்யசபா தொகுதியும் புரட்சி பாரதம் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்படுகிறது .
இதேபோல் திமுக தரப்பிலும் கூட்டணிகள் முடிவு செய்யப்பட்டு விட்டன காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் திமுகவுடன் தான் கூட்டணி என்ற இறுதி முடிவு எட்டப்பட்டு இருக்கிறது . அந்த வகையில் திமுக175 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளும் , மதிமுகவிற்கு ஆறு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன .
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மூன்று தொகுதிகளும் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதியும் அகில இந்திய பார்வர்டு பிளாக் மற்றும் ஆதித்தமிழர் பேரவைக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது.  இது தவிர கமலஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது.
மேலும் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியும் , திமுகவில் இணைய காத்திருக்கிறது . அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. ஒருவேளை தேமுதிக கூட்டணி அமைந்தால் அந்த கட்சிக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. இது தவிர,  மிகப்பெரிய கூட்டணி அமையும் என எதிர்பார்த்து இருந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு சரியான கூட்டணி அமையவில்லை.  எனவே இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிடும் சூழ்நிலை இருக்கிறது. இதே போல் நாம் தமிழர் கட்சியின் வருகிற தேர்தலை தனிமையாகவே சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *