Aruppukkottai: இளம்பெண் உள்பட 3 பேர் மாயம்!

Advertisements

கல்லூரி மாணவி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயம்!

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி ஜெயராம் நகரை சேர்ந்தவர் முத்துசெல்வி. இவரது மகள் அபிதா(வயது19), தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். கல்லூரிக்கு செல்லவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டி ருந்தது. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்க ளில் தேடிப்பார்த்தும் பலனில்லை.

இதுகுறித்து அருப்புக் கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் முத்துசெல்வி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் சுபலட்சுமி(24). அங்குள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். பெற்றோர்கள் இவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் சுபலட்சுமி செல்போனில் அதிகநேரம் மூழ்கியிருந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை.

இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாத்தூர் அருகே உள்ள சின்னகொள்ளபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்புத்தாய்(73). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகன் கணேசன் கொடுத்த புகாரின்பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *