ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மாவிடமிருந்து கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்தார்.
இந்நிலையில், 2027-ம் ஆண்டு ஐபிஎல் தொடரை முன்னிட்டு மீண்டும் ரோஹித் சர்மாவிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர். இவரது தலைமையில் 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
இதனால் மீண்டும் ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்பது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில சீசன்களாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மாவின் தலைமையில் மீண்டும் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மீண்டும் கேப்டன் பொறுப்புக்கு திரும்பியுள்ள ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆறாவது ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத் தருவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


