தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரங்கள் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல், காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் காவல்துறைக்கு முதலமைச்சர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

