தேமுதிக கூட்டணியில் இழுபறி ஏன்? பிரேமலதா பேசும் பேரம் என்ன தெரியுமா?

Advertisements
தமிழக அரசியலில் கிட்டத்தட்ட அனைத்து பெரிய கட்சிகளும் ஒருவழியாக தங்களது கூட்டணியை முடிவு செய்துவிட்டன. அந்த வகையில் தேமுதிக இன்னமும் தனது முடிவை அறிவிக்கவில்லை . கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே கடலூர் மாநாட்டில் எங்கள் முடிவை அறிவிப்போம் என பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்தார் .
அதன்படி , கடந்த 9ஆம் தேதி கடலூர் மாநாடு நடைபெற்றது. இதில் கூட்டணி பற்றி முடிவு எடுத்து விட்டோம் . ஆனால் இப்போது அறிவிக்கப்போவதில்லை என தெரிவித்தார்.  இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய மிகப்பெரிய கட்சிகள் தங்கள் கூட்டணிகளை இறுதி முடிவு செய்துவிட்டன ஆனால் தேமுதிக இன்னமும் தங்களது முடிவை அறிவிக்கப்படவில்லை .
இதன் பின்னணியில் பிரேமலதா பேசும் பேரத்திற்கு எந்த கட்சியும் முன்வரவில்லை என்பதுதான் முக்கிய தகவலாக பார்க்கப்படுகிறது . விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக கட்சியை வழிநடத்தி வருகிறார் . வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக அவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாகவே பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டார் .
அதிமுக , திமுக,  தமிழக வெற்றி கழகம் என மூன்று முக்கிய கட்சிகளிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அதிமுக கூட்டணியை பொருத்தவரையில் தனக்கு அன்புமணி தலைமையிலான பாமகவை விட கூடுதலாக தொகுதி ஒதுக்க வேண்டும் என கேட்கிறார் . அதாவது குறைந்தபட்சம் 19 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் எதிர்பார்க்கிறார். இது மட்டுமல்லாமல் கூட்டணியில் இணைவதாக இருந்தால் மூன்று அமைச்சர் பதவிகளும் தனது கட்சிக்கு வழங்க வேண்டும் என்கிறார் .
இது தொடர்பாக , அதிமுக சார்பில் பேசும் பொழுது ஏழு தொகுதிகள் ஒதுக்கி தருவதாகவும்,  ராஜ்யசபா எம்பி பதவிக்கு வாய்ப்பில்லை எனவும் அதேபோல் அமைச்சர் பதவிக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.  மேலும் தேர்தல் செலவுக்குறிய பணம் பாரதிய ஜனதா கட்சி மூலம் தரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர் .
இதற்கு உடன்படாத பிரேமலதா விஜயகாந்த் திமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்.  திமுகவை பொருத்தவரையில் தனக்கு 15 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என்றும் தேர்தல் செலவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் , இரண்டு அமைச்சர் பதவிகள் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார் ,
திமுகவை பொருத்தவரையில்,  7 தொகுதிகள் ஒதுக்கி தருவதாகவும் தேர்தல் செலவில் பாதி பணம் தருவதாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது அமைச்சர் பதவிக்கு வாய்ப்பில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இதனிடையே தமிழக வெற்றி கழகத்திலும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் 40 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் 3 அமைச்சர் பதவிகள் தர வேண்டும் தேர்தல் செலவுக்குரிய பணம் தரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்துடன் இன்னமும் பேச்சு வார்த்தை முடிவடையவில்லை . கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் டெல்லி சென்று வருவதால் சரியான முடிவுகள் எட்டப்படவில்லை .
தற்பொழுது,  தேமுதிகவை பொருத்த வரையில்  ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் வாக்கு வங்கி இருக்கிறது.  இருந்தபோதிலும் பிரேமலதா விஜயகாந்த் அளவுக்கு அதிகமான கோரிக்கைகளை வைத்து வருகிறார். தேர்தலுக்கு முன்பாகவே இத்தனை கோரிக்கைகளை வைத்தால் தேர்தலுக்குப் பிறகு இன்னமும் நிறைய கோரிக்கைகள் வைப்பார் என்றும் கட்சி மேல் இடங்கள் அஞ்சுகின்றன .
இதன் காரணமாகத்தான் தேமுதிக கூட்டணி நிலவரம் இழுபறியாக காணப்படுகிறது.  இருந்த போதிலும் கடைசி கட்டமாக பிரேமலதா விஜயகாந்த் திமுக தரப்பில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *