மெலிசா புயலால் கரீபியன் நாடுகளில் வீடுகள், கட்டடங்கள் சேதம்..!

Advertisements

மெலிசா புயலால் கரீபியன் நாடுகளில் வீடுகள், கட்டடங்கள், உட்கட்டமைப்புகள் உடைந்து நொறுங்கியுள்ளதுடன் தெருக்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இந்தப் புயல் வெள்ளப் பாதிப்பால் பல நாடுகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அட்லாண்டிக் பெருங்கடலில் தோன்றிய மெலிசா புயல் கரீபியன் தீவு நாடுகளான ஜமைக்கா, கியூபா, ஹைதி ஆகியவற்றில் மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வீடுகள் கட்டடங்களில் இருந்த கூரைகள் பிய்த்தெறியப்பட்டன.

மின்கம்பங்கள் சாய்ந்ததால் அனைத்து ஊர்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்ததால் தெருவெங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. ஜமைக்காவில் புயல் வெள்ளப் பாதிப்பால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர்.

ஹைதி நாட்டில் வெள்ளத்தால் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *