விருத்தாச்சலத்தைத் தனி மாவட்டமாக்குவோம் – பிரேமலதா எம்.எல்.ஏ உறுதி!

Advertisements

தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு முழு மூச்சுடன் ஈடுபட உள்ளதாகவும் தேர்தல் வாக்குறுதியில் தாம் அளித்த அனைத்து வாக்குகளிலும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசின் ரத்தன் பண்டிட் நியமனம் குறித்து தனது பேச்சை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த போது அதற்கு உடனடியாக தீர்வு கண்ட தமிழக முதல்வர் விஜய்க்கு தனது நன்றியைக் கூறினார். தற்போதைய அரசு சமூகவலைதளம் மற்றும் ரீல்ஸ் நம்பியுள்ளது என விமர்சித்தார். தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *