Mamata Banerjee : மத்திய அரசின் தவறால்தான் பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்தது- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

Advertisements

மத்திய அரசின் தவறால்தான் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானா்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப் பேரவையில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைமூலம், இந்தியாவின் முப்படைகளின் முயற்சியால் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தததாகவும்  ஆனால், மத்திய அரசு அதனைக் கோட்டைவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். அதே சமயம்  ஐ.நா. அமைத்த பயங்கரவாத எதிா்ப்புக்குழுவில் பாகிஸ்தான் இடம் பிடித்ததுள்ளதாகவும் இது  மத்திய அரசின் தோல்வி எனத் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் முற்றிலும் மத்திய அரசின் தவறால் நிகழ்ந்ததுள்ளதாகவும்  சுற்றுலாப் பயணிகள் கூடும் இடத்தில் ஒரு காவலா் கூடப் பாதுகாப்புப் பணியில் இல்லை எனச் சாடினார். நாட்டின் நடக்கும்  நிகழ்வுகளுக்கு, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் பிரதமா் மோடி கவனமாக உள்ளதாக விமர்சனம் செய்தார். மேலும், பஹல்காம் தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளை விரைவில் நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *