Advertisements

அதிமுக- பாஜக கூட்டணியில அன்புமணியின் பாமக, தினகரனின் அமமுக சேர்ந்திருக்கு. ஏற்கனவே வாசன் தமாகா அங்கதான் இருக்கு. தேமுதிக வருது.. பியூஷ் கோயல் பேசப் போறாருன்னும் சொன்னாங்க. இருந்தாலும் பிரேமலதாவிடம் பியூஸ் கோயல் பேசவில்லை. தேமுதிக 10 அசெம்பிளி சீட், 1 ராஜ்யசபா சீட், மத்திய இணை அமைச்சர் பதவி கேட்குதாம்.
இதனால், பேச்சுவார்த்தையும் அந்த அளவுக்குதான் நிக்குது. இங்க வந்துருக்கிற பியூஷ் கோயல் பிரேமலதாவிடம் கூட்டணி பற்றி பேசாதற்கு காரணம் அமித்ஷா சொன்ன ஒரு வார்த்தைதான் காரணமாம். பியூஸ் கோயலிடம் பிரேமலதாகிட்ட பேசி சீட் நம்பர்ஸை எதுவும் கமிட் பண்ணிக்க வேணாம்னு சொல்லி இருக்கிறாரு அமித்ஷா. அமித்ஷாஜி தரப்பில் இருந்து சைடுல விஜய்கிட்ட தொடர்ச்சியாக பேசிகிட்டு இருக்காங்க.
அதனால விஜய் தரப்புல முடிவு சொல்றவரைக்கும் தேமுதிகவை வெயிட் பண்ண வைக்குற முடிவுல பாஜக தரப்பு உள்ளதாம். அமித்ஷா தரப்பில் விஜய்யிடத்தில், ” நீங்கள் கூட்டணிக்கு உள்ளே வாங்க.. இப்ப வரைக்கும் எங்க கூட்டணில சிஎம் கேண்டிடேட்டுன்னு நாங்க யாரையும் அறிவிக்கல.. நீங்களும் கூட்டணிக்கு உள்ள வந்து . எல்லோரும் சேர்ந்து தேர்தலை சந்திப்போம்.
எலக்ஷன் முடிஞ்சதுக்கு அப்புறமா சிஎம், டெபுட்டி சிஎம்னு மற்ற விஷயங்களை பேசி முடிவெடுப்போம்னு கூறப்பட்டுள்ளதாம். மேலும், நீங்க கேட்கிற சீட்டையும் தர்றோம். தேர்தல் செலவுன்னு மத்த விஷயங்களையும் நாங்களே பார்த்துக்கிறோம். நீங்க சொல்றவங்களுக்கு மற்ற மாநிலங்களில் இருந்து கூட ராஜ்யசபா எம்பி பதவியும் தர்றோம்னு பாஜக தரப்பில் பேசியிருக்காங்க.
இதுக்கு விஜய்கிட்ட இருந்து இறுதி முடிவு வர வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அதனாலதான் பிரேமலதாகிட்ட தேர்தல் சீட் பற்றி இன்னும் பேசவில்லை பாஜக தரப்பு. அமித்ஷா தந்த ஆஃபர்களை விஜய்யும் சீரியசா டிஸ்கஷன் நடத்திட்டு இருக்காரு. ஆனா எந்த முடிவும் நாம இப்போதைக்கு எடுக்க வேண்டாம். ஏன்னா நம்மகிட்ட ராகுல் காந்தியும் பேசிகிட்டு இருக்காரு. ராகுல் காந்தி இறுதியாக சொல்றதை வெச்சு நாம பாஜக- அதிமுக கூட்டணிக்கு போறதா? தனித்தே போட்டியிடறாதா?ன்னு முடிவு செய்வோம்..
அதுவரைக்கும் கூட்டணியை பத்தி யாரும் எங்கேயும் பேசாதீங்கனு விஜய் கட்சிக்காரங்களுக்கு கட்டளை போட்டுள்ளாராம். விஜய்யை குளிர வைத்ததான் டெல்லியில இருந்து இப்போ குட் நியூஸ் வந்துருக்குது. விஜய்க்கு ரொம்பவே பிடிச்ச, அவரு கேட்ட விசில் சின்னத்தை எலக்ஷன் கமிஷன் ஒதுக்கி கொடுத்துருக்கு. விஜய்க்கு என்ன வேணும்னாலும் டெல்லி செஞ்சு தரும்னு சொல்ற சிக்னல்தான்யா இதுனும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதேவேளையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. சோனியாகாந்திக்கு திமுக கூட்டணில இருக்கதான் ஆசையாம்.அதனால காங்கிரஸ் நம்மை விட்டு போகாது.. இப்படி பேசுறது எல்லாமே சீட்டை அதிகமா வாங்கத்தான்.. நாமும் பேச்சுவார்த்தை குழு அமைச்சு பேசுனாவே எல்லாமே சரியாகிடும்னு திமுக தரப்பு நம்புகிறது. சில நாட்களுக்கு முன் , டெல்லிக்கு போன சபரீசன் ராகுல்- மல்லிகார்ஜூன கார்கேவை சந்திச்சு பேசுனாரு. அதிகபட்சம் 30 சீட் வரைக்கும் கூட நாங்க ரெடிதான்..
ஆனா அமைச்சரவையில மட்டும் பங்கு இல்லை”ன்னு உறுதியாக சொல்லப்பட்டதாம். காங்கிரஸ் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி தர்றோம். கூடுதலாக வாரியங்களும் கொடுக்கிறோம்.அரசு நியமன பதவிகளில் குறிப்பிட்ட பெர்சண்டேஜ் தருவோம். உள்ளாட்சி தேர்தலிலும் அதிகமான இடங்களை ஒதுக்குறோம்னு சொன்னதாக தகவல். சொல்ல வேண்டியது எல்லாமே சொல்லியாகி விட்டது. இனிமேல், காங்கிரஸ்தான் முடிவெடுக்கனும் என்று திமுக தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், பனையூர்காரரால்தான் காங்கிரஸ் முடிவெடுக்க தாமதிக்கிறதாம். காங்கிரஸ்காரர்களிடத்தில் விசாரித்தால், ராகுலும் விஜய்யும் பேசிகிட்டுதான் இருக்காங்க. எங்களுக்கு 100 சீட் தர்றோம். துணை முதல்வர் பதவி கொடுக்கிறோம்னு விஜய் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. திமுகவுடன் கூட்டணியில நீடிச்சா, திமுகவோட வெற்றிதான் உறுதியாகும்.. ஆனாலும் எங்களுக்கு ஆட்சியில பங்கு கிடைக்காது. அதேநேரத்துல விஜய் கொடுத்த ஆஃபரை ஏத்துகிட்டு கூட்டணிக்கு போனா, 100 தொகுதிகளில்ல காங்கிரஸ் போட்டியிடும்.
கட்சிக்கு கூடுதல் எம்.எல்.ஏக்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது . ஆட்சியிலும் பங்கு பெறுவோம் என்று ராகுல் கணக்கு போடுவதாக கூறுகின்றனர். மேலும்,விஜய் மீது ராகுல் காந்திக்கு ஒரு பரிதாபமும் ஏற்பட்டுள்ளதாம். கரூர் சம்பவத்துல திமுக அரசும் , ஜனநாயகன் பட விவகாரத்துல மத்திய பாஜக அரசும் விஜய்யை பழிவாங்குறாங்கன்னு அனுதாபமும் ராகுல் நினைக்கிறாராம். இதனால, விஜய்யோட செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகமாகுதுன்னுதான் சர்வே ரிப்போர்ட்ஸ் போயிருக்கு.
இதுவும் காங்கிரசுக்கு நல்லதுதானே அப்படினு ராகுல் நினைக்கிறாராம். இதனால், கூட்டணி எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றுதான் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். பல தரப்பு ஆப்ஷன்களையும் ராகுல் காந்தி கணக்கு போட்டு வெச்சிருக்கிறதால ராகுல் திமுகவை மண்டை காய வெச்சிகிட்டு இருக்கிறாரு என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்..
Advertisements


