
பிரதமருக்கு சிபிஎஸ்இ மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், தர்மேந்திர பிரதான் ஜி எப்போதோ நீக்கப்பட்டிருப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சி.பி.எஸ்.இ. தேர்வு குளறுபடி விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்று பதிவிட்டுள்ளார். இதில், சி.பி.எஸ்.இ. தலைவர் மற்றும் செயலாளர் மாற்றப்பட்டு, ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், இதற்கு உண்மையான பொறுப்பேற்க வேண்டிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தில் உடனடியாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்து, நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பிரதமருக்கு 18.5 மில்லியன் சிபிஎஸ்இ மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், தர்மேந்திர பிரதான் ஜி எப்போதோ நீக்கப்பட்டிருப்பார் என்று விமர்சித்தார்.


