Covai : இரண்டு நாட்கள் நடைபெற உள்ள உலக புத்தொழில் மாநாடு..!

Advertisements

கோவையில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள உலக புத்தொழில் மாநாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

கோவையில், தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வருகின்ற 9, 10 ஆம் தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது என்றார்.

பின்னர் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார். இந்த மாநாட்டிற்கான லோகோவையும் இணையதளத்தையும் துணை முதலமைச்சர் கடந்த ஏப்ரல் மாதம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

பின்னர் மாநாட்டில், இந்தியாவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மத்திய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத்துறைகளும் பங்கேற்க உள்ளன.

மேலும், 750 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளும், 315 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *