சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை நயன்தாராவுக்கு நடிகர் தனுஷ் தரப்பு வக்கீல் 24 மணி நேர கெடு!

Advertisements

கடந்த இரு தினங்களாகத் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பிய நடிகை நயனின் டாக்குமெண்ட்ரியில், இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை நயன்தாராவின் டாக்குமெண்ட்ரியில் இடம் பெற்றுள்ள ‘நானும் ரெளடிதான்’ 3 வினாடி படக்காட்சிகளை நீக்கத் தனுஷ் தரப்பு 24 மணி நேரம் கெடு கொடுத்துள்ளது.

நடிகை நயன்தாராவின் 40 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ நயன்தாரா ஃபியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற டாக்குமெண்ட்ரி இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. இதில் நடிகை நயன்தாராவின் சினிமா வாழ்க்கை, அவரது காதல், திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் நயன்தாராவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்த படம் ‘நானும் ரெளடிதான்’. அதனால், அந்தப் படப்பிடிப்பு தளத்தில் இருந்தும் சில காட்சிகள் டாக்குமெண்ட்ரியில் இடம் பிடித்திருந்தது.

இதற்காகப் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம் நயன்தாரா அனுமதி கேட்டும் அவர் இரண்டு வருடங்களாகத் தர மறுத்திருக்கிறார். இதற்குத் தனுஷின் தனிப்பட்ட வன்மம்தான் காரணம் எனவும் ‘நானும் ரெளடிதான்’ படத்தின் காட்சிகளை டாக்குமெண்ட்ரியில் சேர்க்கும் முடிவைக் கைவிட்டோம் எனக் காட்டமான அறிக்கை ஒன்றை நேற்று முன் தினம் நயன்தாரா வெளியிட்டார்.

இருந்தாலும் அந்தப் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட சில நிமிட காட்சிகள் இந்த டாக்குமெண்ட்ரியில் இடம்பிடித்திருக்கிறது. தடையில்லா சான்றுக்குத் தனுஷ் மறுத்திருந்தும் அதையும் மீறி ‘நானும் ரெளடிதான்’ படக்காட்சிகளை இந்த டாக்குமெண்ட்ரியில் வைத்திருப்பது தவறு என்றும் இதனை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் எனவும் தனுஷின் வழக்கறிஞர் கெடு கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே, டீசரில் இடம்பெற்றிருக்கும் 3 வினாடி காட்சிகளுக்காக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *