
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் விரைவில் சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட்டு டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரிகளையும் விதித்துள்ளார். இந்நிலையில், அதிபர் டிரம்ப் அவருடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் நான்கு வாரங்களில் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார். இந்த சந்திப்பில், அமெரிக்காவின் சோயா பீன்ஸ் ஏற்றுமதி விவகாரம் பற்றி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறினார்.
இதனையடுத்து, சோயா பீன்ஸ்களை சீன அரசு வாங்க மறுப்பதால் அமெரிக்க விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரிவிதிப்பால் அதிக அளவிலான பணம் கிடைத்துள்ளதாகவும் அதை கொண்டு விவசாயிகளுக்கு கொடுத்து உதவிகரமாக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.



