தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், மேற்குவங்கம் மாநிலத்திற்கு மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மற்ற மூன்று மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவைகளின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலத்திற்கான தேர்தல் தேதியை அறிவித்தார்.
ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4ஆம் தேதி..கேரளாவுக்கு ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப் பதிவு, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை.புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப் பதிவு, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை.அசாம் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப் பதிவு, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது…

