மலேசியாவுக்குப் பறக்கும் டார்னியர் விமானங்கள்..!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மலேசியாவுக்குச் சென்றுள்ளார். பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையே உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மலேசியப் பிரதமருடன்  பேச்சு நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று தில்லியில் இருந்து தனி விமானத்தில் மலேசியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.கோலாலம்பூரில் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமைச் சந்தித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்த உள்ளார். அப்போது பாதுகாப்பு, வணிகம், தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையே உள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து உடன்பாடுகள் கையொப்பமாகும் எனக் கூறப்படுகிறது.

மலேசியாவுக்கு டார்னியர் விமானம் விற்பது, ஸ்கார்பியன் நீர்மூழ்கிகள், சுகோய் 30 வகை விமானங்களைப் பராமரிப்பது ஆகியன குறித்தும் உடன்பாடு கையொப்பமாக உள்ளது.இது குறித்துப் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்புத்துறையில் இப்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே தமது பயணத்தின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *