Advertisements

தென் மாவட்டத்தில் 15 தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தேர்வு செய்து வைத்துள்ளது அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் பாஜக முடிவு செய்துள்ளது
இது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் தங்களுக்கு 50 தொகுதிகளை குறைந்தபட்சம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறது.டெல்லி பாஜக மேலிடத்து நிர்வாகியான உள்துறை அமைச்சர் அமித்ஷா இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசி வருகிறார்.இதனிடையே தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எந்தெந்த தொகுதியில் வெற்றி பெறலாம் என ஐம்பது தொகுதிகளை தேர்வு செய்யும்படி டெல்லி பாஜக மேல் இடம் தமிழக பாஜகவுக்கு உத்தரவிட்டுள்ளது.அதன்படி தமிழக பாஜக ஆய்வு குழு ஒன்று தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து 50 தொகுதிகளை தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள் இதில் குறிப்பாக தென்மாவட்டத்தில் 15 தொகுதிகளை தேர்வு செய்து அதற்கான வேட்பாளர்களையும் முடிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட குழுவினர் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகமான வாக்குகள் விழுந்திருக்கின்றன என்பதை கணக்கெடுத்து அதற்கு தகுந்தபடி ஒரு பட்டியலை தேர்வு செய்திருக்கிறார்கள்.இதன்படி தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் 15 தொகுதிகள் தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதனிடையே கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் மொத்தம் உள்ள 58 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது இதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் பாரதிய ஜனதா கட்சி உயர் மட்ட குழு ஆலோசனை நடத்தி இருக்கிறது.இதற்கு காரணமாக முக்குலத்தோர் அதிருப்தி ஓபிஎஸ் தினகரன் உள்ளிட்ட விவகாரங்கள் ஆகியவை அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றன.
அந்த வகையில் தென் மாவட்டங்களில் போட்டியிட தற்பொழுது அதிமுக தயக்கம் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது எனவே தென் மாவட்டங்களில் தங்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும்படி கோரிக்கை வைப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.இதன்படி சென்னை மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் தவிர கன்னியாகுமரி திருநெல்வேலி மதுரை சிவகாசி கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா இரண்டு தொகுதிகளும் மற்ற மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியும் பாஜக தேர்வு செய்து வைத்திருக்கிறது.ஒரு தொகுதிக்கு இரண்டு பேர் வீதம் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள் அதன்படி நாகர்கோவிலில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் விளவங் கோட்டில் விஜய தாரணி போட்டியிடுகிறார் நாங்குநேரியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார் முன்னதாக தென்காசியில் போட்டியிடுவதாக இருந்த சரத்குமார் தற்பொழுது திருச்செந்தூருக்கு தேர்வாகி இருக்கிறார்.
இதேபோல் திருநெல்வேலியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருந்த நைனார் நாகேந்திரன் திருநெல்வேலி யில் போட்டியிடுகிறார். சென்னை தி நகரில் வினோத் பி செல்வம் போட்டியிடுகிறார் கோவை தெற்கில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார் பேராவூரணியில் கருப்பு முருகானந்தம் போட்டியிடுகிறார் ராசிபுரத்தில் விபி துரைசாமி போட்டியிடுகிறார்.இவை அனைத்தும் முதல் கட்டமாக இறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.அதிமுக தரப்பில் 50 தொகுதிகள் ஒதுக்கி தரப்படாவிட்டாலும் அதற்குள்ளாக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன
Advertisements



