
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் இருப்பதாகவும் ஆனால் மனரீதியாக அவரை சித்திரவதை செய்து வருவதாகவும் அவரது தங்கை பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கிரிக்கெட் வீரராக சிறந்து விளங்கியவர் அவர் பிரதமராக இருந்தபோது தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் மனைவியுடன் சேர்ந்து விற்பனை செய்து சொத்துக்கள் சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன இது தவிர மேலும் பல வழக்குகள் இம்ரான் கான் மீது தொடுக்கப்பட்டன
அதில் பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த ரகசிய தகவல்களைகசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதை அடுத்து அவர் ராவல் பிண்டி அருகே உள்ள அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்
இந்த நிலையில் சிறையில் இருக்கும் அவர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன இதை அடுத்து பாகிஸ்தான் முழுவதும் இம்ரான் கான் கட்சியினர் பெரும் கொந்தளிப்படைந்ததோடு போராட்டங்களிலும் ஈடுபட்டனர் அவர் உயிருடன் உள்ளாரா இல்லையா என்று தெரியவில்லை என இம்ரான் கான் குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வந்தனர்
இம்ரான் கானை சித்திரவதை செய்து அவரது பிணத்தை இராணுவத்தினர் மறைத்து விட்டதாகவும் செய்திகள் பரவின
இதற்கிடையே இந்த குற்றச்சாட்டு குறித்து சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது இம்ரான் கான் உயிரோடு இருக்கிறார் என்று தகவல் தெரிவித்தனர்
இதனை அடுத்து நேற்று இஸ்லாமாபாதா ஐகோர்ட் மற்றும் அடியாலா சிறை வளாகம் முன்பு இம்ரான் கான்கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர் இம்ரான் கான் உடல்நிலை எப்படி இருக்கிறது சிறையில் உள்ளவரை காட்டுமாறு கோரி முழக்கங்களை எழுப்பினர்
இந்த போராட்டத்தில் இம்ரான் கானின் சகோதரிகளில் ஒருவாரான உஸ்மா கானும் கலந்து கொண்டார்இந்த போராட்டம் தொடர்ந்து பல மணி நேரம் நீடித்தது இதனைத் தொடர்ந்து உஸ்மா கானுக்கு சிறைக்குள் சென்று இம்ரான் கானை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் ஒரு வழியாக எங்களுக்கு அனுமதி கிடைத்தது மிக்க மகிழ்ச்சி என்று கூறியபடியே உஸ்மான் கான் சிறை வளாகத்திற்கு சென்றார்
பின்னர் சிறிது நேரம் கழித்து சிறை வளாகத்தில் இருந்து வெளியே வந்த உஸ்மாகான் தமது சகோதரர் இம்ரான் கான் உயிருடன் தான் இருக்கிறார் என்று அறிவித்தார் அதே சமயம் மனரீதியாக அவரை சிறைக்குள் சித்திரவதைக்கு ஆளாக்குவதாகவும் தெரிவித்தார்
இதனால் இம்ரான் கான் படுகொலை பற்றிய செய்திகளுக்கு விடை கிடைத்தது இதன் பின்னர் தொண்டர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்




