Advertisements
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெள்ளை சட்டையில் வந்திருந்தனர்.
வெள்ளை சட்டையில் யார் அந்த சார்? என்ற வாசகம் அடங்கிய பேட்ஜும் அணிந்திருந்தனர்.
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று உரையாற்ற உள்ள நிலையில் வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளனர்.