
மொரிங்கா என்று அழைக்கப்படும் முருங்கை கீரை ஆனது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. இதில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், மினெரல்கள், அயன்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக, உலகம் முழுவதும் இதனை ‘சூப்பர்ஃபுட்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதனைச் சாப்பிடுவதால் நமது உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.
இது தவிர, அதன் இலைகள் பல வகையான நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது. முருங்கை கீரை ஆனது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கிறது, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது மற்றும் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. முருங்கை இலைகளை மென்று சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். எனவே இதைச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்குமே சிறந்த உணவாகும்.
இந்த இலைகளைக் கொண்டு பொரியல், கூட்டு, சாம்பார் போன்ற பல விதமான உணவுகளைச் செய்து சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் துவையல் செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? இட்லி, தோசை போன்ற டிஃபன்களுக்கு தேங்காய் துவையல், தக்காளி துவையல், கொத்தமல்லி துவையல், சாம்பார் போன்ற சைட் டிஷ்களை சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் முருங்கை கீரை துவையல் செய்து சாப்பிட்டு பாருங்கள், அதன் சுவை அற்புதமாக இருக்கும். சரி இப்போது மொரிங்கா துவையல் எப்படி செய்வது என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
மொரிங்கா துவையல்:
தேவையான பொருட்கள்:
முருங்கை இலை – 2 கப்,
துருவிய தேங்காய் – 1/2 கப்,
பச்சை மிளகாய் – 2 முதல் 3,
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
சனா பருப்பு – 2 டீஸ்பூன்,
பெருங்கத்தூள் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி,
புளி கரைத்தது- 1/2 டீஸ்பூன்,
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
- முருங்கை இலையை நன்றாகக் கழுவி, உலர்த்த வேண்டும்.
- பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்க்கவும்.
- அவை வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்கத்தூள் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின்னர் முருங்கை இலைகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்
- கடைசியாகப் புளி கரைசலை சேர்த்து சிறிது நேரம் நன்றாக வதக்கவும். அதைத் தொடர்ந்து முருங்கைக் கீரை கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும்.
- அவ்வளோதான் ருசியான மொரிங்கா துவையல் ரெடி, இதைச் சாதம் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்


