டெல்லியில் ஏ.சி. வெடித்து பயங்கர தீ விபத்து…. 9 பேர் பலி….!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியின் ஷாதாரா பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தொடர்ந்து, கட்டிடம் முழுவதும் தீ பரவியதால், குடியிருப்பில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இதன் பின்னர், இரண்டரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்தில், படுகாயமடைந்த சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ அணைக்கப்பட்டிருந்தாலும், கட்டிடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஏ.சி. வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *